விளையாட்டு

ஊக்கமருந்து ஊசி போட்ட மருத்துவருக்கு அபராதம்

செய்திப்பிரிவு

தென்கொரியாவை சேர்ந்த நீச்சல் வீரர் பார்க் டே ஹுவான் (25) கடந்த 2008-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டி யில் 400 மீட்டர் ப்ரீஸ்டைல் பிரிவில் தங்கமும், 200 மீட்டர் ப்ரீஸ்டைலில் வெள்ளி பதக்கமும் வென்றார்.

இந்நிலையில் கடந்த இரு ஆண்டுகளாக பார்க் டே ஹுவான், சியோலில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சென்றுள்ளார். அங்கு அவருக்கு பெண் மருத்துவரான கிம் என்பவர் ஹார்மோன், விட்டமின் ஊசிகள் செலுத்தியுள்ளார். இந்நிலையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பார்க் டேவுக்கு ஊக்கமருந்து சோதனை நடத்தப்பட்டது.

இதில் அவர் தடைசெய்யப்பட்ட ஊக்கமருந்துகளை பயன்படுத்தியது தெரியவந்தது. இதையடுத்து பார்க் டே ஹுவானுக்கு 18 மாதங்கள் தடைவிதிக்கப்பட்டது. இதனால் அடுத்த வருடம் பிரேசிலில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் பார்க் டே ஹுவான் பங்கேற்க முடியாத நிலை உள்ளது.

இந்நிலையில் பார்க் டே ஹுவானுக்கு சிகிச்சை அளித்த டாக்டர் கிம் மீது புகார் அளிக்கப்பட்டது. இதுதொடர்பான புகாரை விசாரித்த சியோல் நீதிமன்றம், கிம்முக்கு 847 அமெரிக்க டாலர்கள் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது.

SCROLL FOR NEXT