விளையாட்டு

தெற்கு ஆசிய கால்பந்து போட்டி: இலங்கை அணியை வீழ்த்தியது இந்தியா

செய்திப்பிரிவு

திருவனந்தபுரத்தில் நடைபெற்று வரும் தெற்கு ஆசிய கால்பந்து போட்டியில் இந்தியா தனது முதல் ஆட்டத்தில் இலங்கையை வீழ்த்தியது.

இந்தியா, இலங்கை, நேபாளம், ஆப்கானிஸ்தான், வங்கதேசம், மாலத்தீவு, பூட்டான் ஆகிய 7 நாடுகள் பங்கேற்றுள்ள தெற்கு ஆசிய கால்பந்து போட்டி கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நடைபெற்று வருகிறது. இதன் ஏ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி நேற்று தனது முதல் ஆட்டத்தில் இலங்கையை எதிர்கொண்டது.

ராபின் சிங்

முதல் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. 51வது நிமிடத்தில் இந்தியா முதல் கோல் அடித்தது. இந்த கோலை சுனில் சேத்ரி உதவியுடன் ராபின் சிங் அடித்தார். 73வது நிமிடத்தில் ராபின் சிங் மேலும் ஒரு கோல் அடிக்க இந்திய அணி 2-0 என முன்னிலைப்பெற்றது. கடைசி வரை போராடியும் இலங்கை அணியால் பதில் கோல் அடிக்க முடியவில்லை. முடிவில் இந்தியா 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

இந்தியா தனது அடுத்த ஆட்டத்தில் நேபாளத்துடன் நாளை மோதுகிறது.

SCROLL FOR NEXT