விளையாட்டு

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான 2வது டெஸ்ட்: ஆஸ்திரேலியா 459 ரன்கள் முன்னிலை

செய்திப்பிரிவு

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான 2வது டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி 459 ரன்கள் முன்னிலை பெற்று வலுவான நிலையில் உள்ளது.

மெல்பர்னில் நடைபெற்று வரும் இந்த டெஸ்டில் ஆஸ்திரேலியா முதல் இன்னிங்ஸில் 135 ஓவரில் 551 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. உஸ்மான் ஹவாஜா 144, ஸ்டீவ் ஸ்மித் 134, பர்ன்ஸ் 128, ஆடம் வோஜஸ் 106 ரன்கள் எடுத்தனர். தொடர்ந்து ஆடிய மேற்கிந்திய தீவுகள் 2வது நாள் ஆட்டம் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 91 ரன்கள் எடுத்தது. பிரத் வெயிட் 17, சந்திரிகா 25, சாமுவேல்ஸ் 0, பிளாக்வுட் 28, ரம்தின் 0, ஜேஸன் ஹால்டர் 0 ரன்களில் வெளியேறினர்.

டேரரன் பிராவோ 13, கார் லோஸ் பிரத்வெயிட் 3 ரன்னுடன் நேற்று 3வது நாள் ஆட்டத்தை தொடர்ந்தனர். இருவரும் நிதான மாக ஆடி அரை சதம் அடித்தனர். ஸ்கோர் 173 ஆக இருந்த போது கார்லோஸ் பிரத்வெயிட், நாதன் லியான் பந்தில் ஆட்டமிழந்தார். அவர் 126 பந்தில், 1 சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 59 ரன் எடுத்தார். இந்த ஜோடி 7வது விக்கெட்டுக்கு 90 ரன்கள் சேர்த்தது. அடுத்து வந்த கேமார் ரோச் 22, ஜேரோம் டெய்லர் 15 ரன்களில் நடையை கட்டினர்.

204 பந்தில் 8 பவுண்டரிகளுடன் 81 ரன்கள் சேர்த்த நிலையில் கடைசி விக்கெட்டாக பிராவோ, பேட்டின்சன் பந்தில் ஆட்டமிழந்தார். முடிவில் மேற்கிந்திய தீவுகள் 100.3 ஓவரில் 271 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. வாரிகன் 11 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். ஆஸி. தரப்பில் பேட்டின்சன், நாதன் லியான் தலா 4, பீட்டர் சிடில் 2 விக்கெட் கைப்பற்றினர்.

280 ரன்கள் முன்னிலையுடன் 2வது இன்னிங்ஸை விளையாடிய ஆஸ்திரேலியா நேற்றைய 3வது நாள் ஆட்டம் முடிவில் 32 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 179 ரன்கள் எடுத்தது. பர்ன்ஸ் 4, வார்னர் 17, ஹவாஜா 56 ரன்களில் ஆட்டமிழந்தனர். ஸ்டீவ் ஸ்மித் 70, மிட்செல் மார்ஷ் 18 ரன்களுடன் களத்தில் இருந்தனர். மேற்கிந்திய தீவுகள் தரப்பில் ஹோல்டர் 2, கார்லோஸ் பிரத்வெயிட் 1 விக் கெட் கைப்பற்றினர். 7 விக்கெட் கள் கைவசம் இருக்க ஆஸ்திரே லிய அணி 459 ரன்கள் முன்னி லைப்பெற்றுள்ள நிலையில் இன்று 4வது நாள் ஆட்டம் நடைபெறுகிறது.

12 இன்னிங்ஸ்களுக்கு பிறகு....

# மேற்கிந்திய தீவுகள் அணி 271 ரன்கள் எடுத்தது. 1988க்கு பிறகு அந்த அணி மெல்பர்னில் எடுத்த அதிகபட்ச ரன்களாக இது அமைந்தது.

# பேட்டின்சன் பந்தில் கார்லோஸ் பிரத்வெயிட் இருமுறை ஆட்டமிழந்தார். ஆனால் அது நோபால்களாக அமைந்தது. 13 மற்றும் 50 ரன்களை பிரத்வெயிட் சேர்த்திருந்த போது இந்த நிகழ்வுகள் நடைபெற்றது.

# வெளிநாட்டு தொடர்களில் தொடர்ச்சியாக 12 இன்னிங்ஸ்களுக்கு பிறகு தற்போது தான் மேற்கிந்திய தீவுகள் 100 ஓவர்களுக்கு மேல் பேட் செய்துள்ளது. கடைசியாக 2013ல் ஹாமில்டன் டெஸ்டில் 116.2 ஓவர்களை சந்தித்திருந்தது.

# மேற்கிந்திய தீவுகள் கடைசி நான்கு விக்கெட்களுக்கு 188 ரன்கள் சேர்த்தது.

# நாதன் லியான் இந்த ஆண்டு 13 டெஸ்ட் போட்டியில் 45 விக்கெட் கைப்பற்றியுள்ளார். இதற்கு முன்னர் அவர் 2013ல் 42 விக்கெட் வீழ்த்தியிருந்ததார்.

ஆஸி. வீரர்களில் இந்த ஆண்டில் ஜோஸ் ஹஸல்வுட் 51, மிட்செல் ஸ்டார்க் 46 விக்கெட் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT