விளையாட்டு

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட்: தோல்வியை தவிர்க்க தென் ஆப்பிரிக்கா போராட்டம்

செய்திப்பிரிவு

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் தோல்வியை தவிர்க்க தென் ஆப்பிரிக்க அணி போராடி வருகிறது.

இங்கிலாந்து - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டி டர்பனில் நடந்து வருகிறது. இதில் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 303 ரன்களையும், தென் ஆப்பிரிக்க அணி 214 ரன்களையும் எடுத்தது. இதைத் தொடர்ந்து 2-வது இன்னிங்ஸை ஆடிய இங்கிலாந்து அணி நேற்று 326 ரன்களுக்கு ஆல் அவுட ஆனது. அந்த அணியில் ஜோ ரூட் 73 ரன்களையும், பேர்ஸ்டா 79 ரன்களையும் எடுத்தனர். தென் ஆப்பிரிக்க அணியின் சார்பில் டேன் பியட் 5 விக்கெட்களை கைப்பற்றினார்.

வெற்றி பெற 416 ரன்களை எடுக்கவேண்டும் என்ற நிலையில் ஆடவந்த தென் ஆப்பிரிக்க அணி, நேற்று 38 ஓவர்களின் இறுதியில் 3 விக்கெட் இழப்புக்கு 124 ரன்களை எடுத்து தோல்வியை தவிர்க்க போராடிக்கொண்டிருந்தது. இன்று இப்போட்டியின் இறுதி நாள் ஆகும்.

SCROLL FOR NEXT