இலங்கையில் நடைபெறும் 3 நாடுகள் கிரிக்கெட் போட்டி தொடருக்கான யு19 இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
19 வயதுக்குட்பட்டோருக்கான 3 நாடுகள் கிரிக்கெட் போட்டி இலங்கையில் நாளை தொடங்குகிறது. இதில் இந்தியா, இலங்கை, இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன. இந்த தொடர் வரும் 21ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்நிலையில் இதில் பங்கேற்கும் இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. இந்திய அணி விவரம்:
ரிக்கி புய் (கேப்டன்), ரிஷாப் பன்ட், யோகேஷ் சர்மா, கனிஷ்க் சேத், அமாந்தீப் காரே, மயங் தகார், அவேஸ் கான், இஷான் கிஷான், விராட் பினோத் சிங், ராகுல் பாதம், அன்மோல்பிரீத் சிங், மகிபால் லோம்ரோர், சையத் கலீல் அகமது, வாஷிங்டன் சுந்தர், சர்பிராஸ் கான், ஷீஷான் அன்சாரி, சுபம் மாவி, ஹமான்ஷூ ராணா.
டிராவிட் தலைமையின் கீழ் பயிற்சி பெற்று வரும் இந்திய அணி கடந்த வாரம் கொல்கத்தாவில் நடைபெற்ற 3 நாடுகள் போட்டியில் கோப்பை வென்றது குறிப்பிடத்தக்கது.