விளையாட்டு

உலகக் கோப்பைக் கால்பந்து: லண்டனிலிருந்து பிரேசிலுக்கு ஸ்கூட்டரில் சென்ற ரசிகர்

செய்திப்பிரிவு

உலகக் கோப்பை கால்பந்து தொடரில் இங்கிலாந்து அணியின் ஆட்டத்தைப் பார்க்க லண்டனிலிருந்து பிரேசிலுக்கு வெஸ்பா ஸ்கூட்டரிலேயே சென்றார் இங்கிலாந்து ரசிகர்.

கிறிஸ் ஹாலெட் என்ற இந்த நபருக்கு வயது 44. லண்டனிலிருந்து வெஸ்பா ஸ்கூட்டரில் புறப்பட்ட இவர் சுமார் 4 மாதங்களுக்குப் பிறகு பிரேசில் வந்து சேர்ந்துள்ளார்.

24,000 கிமீ தூரத்தை இவர் 4 மாதங்களில் கடந்துள்ளார்.

தனது இந்தப் பயணம் முதுகைப் பதம் பார்த்தது என்றாலும் விமானத்தில் செல்வதை விட இன்பமாகவே இருந்தது என்கிறார் ஹாலெட்.

உலகக் கோப்பைக் கால்பந்தில் பங்குபெறும் 32 நாடுகளில் 18 நாடுகளை இவர் தனது ஸ்கூட்டரில் கடந்து சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

SCROLL FOR NEXT