டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு கேப்டனாக பொறுப்பேற்றது, தோனியுடன் இணைந்து டாஸ் நிகழ்வில் பங்கேற்றது எனக்கு சிறப்பான தருணம். என்னைப் பொருத்தவரை தோனி எனக்கு ஆலோசகர், நண்பர் என அனைத்தும் என்று டெல்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பந்த் தெரிவித்தார்.
மும்பையில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது டெல்லி கேபிடல்ஸ் அணி.
முதலில் பேட் செய்த சிஎஸ்கே அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 188 ரன்கள் சேர்த்தது. 189 ரன்கள் எனும் இமாலய இலக்கைத் துரத்திய டெல்லி கேபிடல்ஸ் அணி 3 விக்கெட்டுகளை இழந்து 8 பந்துகள் மீதமிருக்கையில் 190 ரன்கள் சேர்த்து 7 விக்கெட்டில் வென்றது.
போட்டியின் வெற்றிக்குப்பின் டெல்லி கேபிடல்ஸ் கேப்டன் ரிஷப் பந்த் கூறியதாவது:
ஐபிஎல் தொடரில் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டதும், தோனியுடன் நடந்து வந்து அவருக்கு எதிராக டாஸ் நிகழ்வில் பங்கேற்றதும் எனக்குரிய சிறப்பான தருணமாகவே கருதிகிறேன். நான் தொடர்ந்து தோனியிடம் கற்று வருகிறேன், எனக்கு தோனி என்றால் நண்பர், ஆலோசகர் என அனைத்தும்.
எப்போதுமே ஒரு போட்டியில் வென்றுவிட்டாலே அனைத்தும் நல்லபடியாகவே தெரியும். ஆனால், ஆட்டத்தின் நடுப்பகுயில் சிஎஸ்கே ரன்கள் குவித்தவுடன் நான் பதற்றமடைந்தேன், ஆனால், ஆவேஷ்கான்அடுத்தடுத்த விக்கெட்டுகளை வீழ்த்தி சிறப்பாகச் செயல்பட்டார். நார்ஜே, ரபாடா இல்லாமல் யாரை பந்துவீசக் களமிறக்குவது என்றபோது, எங்களுக்கு ஆவேஷ்கான் கண்முன் வந்தார்.
விளையாடும 11 வீரர்களைத் தேர்ந்தெடுத்தபின், நாங்கள் சேஸிங் செய்யும் போது, ஒரு ஓவருக்கு முன்பாகவே ஆட்டத்ைத முடிக்க முடிவு செய்தோம். நாங்கள் ரன்ரேட்டை பற்றி சிந்திக்கவில்லை.
பிரித்வி ஷா, ஷிகர் தவண் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தினர், குறிப்பாக பவர்ப்ளேயை நன்றாகப் பயன்படுத்தினர்.
இவ்வாறு பிரித்வி ஷா தெரிவித்தார்.