டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு இந்திய மல்யுத்த வீராங்கனைகளான 18 வயதான சோனம் மாலிக்கும், 19 வயதான அன்ஷு மாலிக்கும் தகுதி பெற்றனர்.
கஜகஸ்தானின் அல்மாதியில் நடைபெற்று வரும் ஆசியத் தகுதிச்சுற்று மல்யுத்தப் போட்டியில் 57 கிலோ எடைப் பிரிவின் அரையிறுதியில் உஸ்பெகிஸ்தானைச் சேர்ந்த அக்மேடோவைத் 12-2 என்றபுள்ளிக் கணக்கில் தோற்கடித்து டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றார் அன்ஷு மாலிக்.
அதேவேளையில் 62 கிலோ எடைப் பிரிவின் அரையிறுதிப் போட்டியில் கஜகஸ்தானின் கேசிமோவாவைப் பரபரப்பான முறையில் தோற்கடித்தார் சோனம்மாலிக். முதலில் 0-6 எனப் பின்தங்கியிருந்தார் சோனம். பிறகுகடுமையாகப் போராடி 9 புள்ளிகள் பெற்று 9-6 என்ற கணக்கில் வெற்றி பெற்று ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதி பெற்றார்.
இதுவரை டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு இந்திய மல்யுத்த வீராங்கனைகள் 3 பேர் தகுதி பெற்றுள்னர். ஏற்கெனவே வினேஷ் போகத் 53 கிலோ எடைப் பிரிவில் கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் தொடரின் வாயிலாக தகுதி பெற்றிருந்தார். ஆடவர் பிரிவில் பஜ்ரங் புனியா (65 கிலோ), ரவி தாஹியா (57 கிலோ), தீபக் புனியா (86 கிலோ) ஆகியோர் தகுதிபெற்றுள்ளனர்.