விளையாட்டு

திருமண முறிவினால் நான் பாதிக்கப்படவில்லை: டென்னிஸ் வீராங்கனை வோஸ்னியாக்கி

செய்திப்பிரிவு

டென்மார்க் டென்னிஸ் வீராங்கனை கரோலின் வோஸ்னியாக்கியின் திருமணம் முறிந்தது என்பதால் அவரை பாதிக்கப்பட்டவர் என்று ஊடகங்கள் வர்ணித்தன.

இதனைக் கடுமையாக அவர் மறுத்துள்ளார். தற்போது விம்பிள்டன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் போட்டியில் அவர் ஒற்றையர் பிரிவில் 4ஆம் சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளார்.

2011ஆம் ஆண்டிற்குப் பிறகு இவர் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் ஒன்றில் 4ஆம் சுற்றுக்கு முன்னேறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் அயர்லாந்து கால்ஃப் வீரர் மெக்கல்ராய் என்பவரைக் காதலித்து வந்தார். இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்வதாக அழைப்பிதழ் கூட அச்சிட்டு அனுப்பப்பட்டாகி விட்டது.

இந்நிலையில் காதலர் மெக்கல்ராய், வோஸ்னியாக்கியை விட்டுப் பிரிந்தார். இந்தத் திருமணம் நிர்பந்திக்கும் எதற்கும் நான் தயாராக இல்லை என்று அவர் பிரிந்து சென்று விட்டார். திருமணம் நின்றது.

இதனால் வோஸ்னியாக்கி மன உளைச்சலுக்கு ஆளானதாகக் கூறப்பட்டது. அதைத்தான் அவர் இப்போது மறுத்துள்ளார். திருமண முறிவினால் டென்னிஸ் ஆட்டம் பாதிப்படையவில்லை என்றும் தான் பாதிக்கப்பட்டவரும் அல்ல என்றும் கூறியுள்ளார்

SCROLL FOR NEXT