இந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையேயான 2வது டெஸ்ட் பெங்களூருவில் நாளை தொடங்குகிறது. இதற்கிடையே நேற்று பயிற்சியின் போது தென் ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் பிலாண்டர் காயம் அடைந்தார். இதனால் அவர் எஞ்சிய போட்டி களில் இருந்து விலகியுள்ளார்.
2வது டெஸ்ட்
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக மொகாலியில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இந்திய அணி 108 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் 4 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி 1-0 என முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் 2வது டெஸ்ட் பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நாளை தொடங்குகிறது. இதற்காக இரு அணி வீரர்களும் நேற்று தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர்.
டி 20, ஒருநாள் போட்டி தொடரை இழந்த இந்திய அணிக்கு முதல் டெஸ்டில் கிடைத்த வெற்றி புத்துணர்ச்சியை கொடுத்துள்ளது. சுழற்பந்து வீச்சில் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா நல்ல பார்மில் உள்ளனர். இருவரும் மொகாலி டெஸ்டில் தலா 8 விக்கெட்டுகள் சாய்த்து அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தனர். இவர் களுடன் அமித் மிஸ்ராவும் நெருக்கடி கொடுப்பார்.
இஷாந்த் சர்மா
இந்திய அணி நாளையும் 5 பந்து வீச்சாளர்களுடன் களமிறங்கக் கூடும். அணியில் ஒரே ஒரு மாற்றம் இருக்கும் என தெரிகிறது. உமேஷ் யாதவ் நீக்கப்பட்டு இஷாந்த் சர்மா களமிறங்கக்கூடும். நேற்று நடைபெற்ற பயிற்சியின் போது விராட் கோலி, புஜாரா, முரளி விஜய் ஆகியோருக்கு வலை பயிற்சியின் போது இஷாந்த் சர்மா பந்து வீசினார்.
சுழற்பந்துவீச்சுக்கு முற்றிலும் சாதகமாக இருந்த மொகாலி டெஸ்டில் முரளி விஜய், புஜாரா நம் பிக்கையுடன் ஆடி ரன் சேர்த்தனர். ஷிகர் தவண், விராட் கோலி, அஜிங்க்ய ரஹானே ஆகியோரும் பொறுப்புடன் ஆடி ரன் சேர்த்தால் வலுவான ஸ்கோரை சேர்த்து நெருக்கடி தரலாம்.
ஸ்டெயின் சந்தேகம்
டி 20, ஒருநாள் போட்டி தொடரை அதிரடி பேட்டிங்கால் வென்ற தென் ஆப்பிரிக்க அணி மொகாலி டெஸ்டில் இந்திய அணி யின் சுழற்பந்து வீச்சை எதிர் கொள்ள முடியாமல் வீழ்ந்தது. கேப்டன் ஆம்லா பார்ம் இன்றி தவிப்பது அணியின் பேட்டிங்கை பலவீனமாக்கியுள்ளது. டு பிளெஸ் ஸியும் சுழலில் தடுமாறுவது கூடுதல் நெருக் கடியை ஏற்படுத்துகிறது. டி வில்லியர்ஸ் மட்டுமே போராடு பவராக உள்ளார்.
வேகப்பந்து வீச்சாளர் ஸ்டெ யின் வயிற்று பகுதியில் ஏற்பட்ட தசைப்பிடிப்பு காரணமாக மொகாலி டெஸ்டில் 2வது இன்னிங் ஸில் பந்து வீசவில்லை. இன்னும் அவர் முழு உடல் தகுதியை பெறவில்லை. எனினும் அவர் நேற்று தீவிர வலை பயிற்சியில் ஈடுபட்டார்.
இதுதொடர்பாக டி வில்லியர்ஸ் கூறும்போது, "ஸ்டெயினுக்கு உடல் தகுதி சோதனை நடை பெற்று வருகிறது. அவர் 100 சதவீதம் உடல் தகுதியுடன் உள் ளார் என்று என்னால் கூறமுடியாது. நாளை (இன்று) வரை அவகாசம் உள்ளது. ஸ்டெயின் மீண்டும் அணிக்கு திரும்புவார் என்ற நம் பிக்கை உள்ளது" என்றார்.
பிலாண்டர் விலகல்
இதற்கிடையே நேற்றைய பயிற் சியின்போது தென்ஆப்பிரிக்கா வீரர்கள் கால்பந்து விளையாடி கொண்டிருந்தனர். அப்போது பிலாண்டரும், டீன் எல்கரும் மோதி விழுந்தனர். இதனால் பிலாண்டரின் இடது கணுக்காலில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனால் அவர் மைதானத்தில் இருந்து இரண்டு உதவியாளர்களுடன் வீரர்கள் அறைக்கு சென்றார்.
அவரது காயம் குறித்து ஸ்கேன் செய்து பார்க்கப்பட்டது. காயம் பலமாக இருந்ததால் அவர் 6 வார காலத்துக்கு ஓய்வில் இருக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இதனால் எஞ்சிய போட்டிகளில் இருந்து பிலாண்டர் விலகி உள்ளார்.
ஸ்டெயினும் உடல் தகுதி பெறாத நிலையில் பிலாண்டர் காயத்தால் விலகி உள்ளது தென் ஆப்பிரிக்க அணிக்கு பின்ன டைவை ஏற்படுத்தியுள்ளது. ஸ்டெ யினும் அணியில் இடம் பெறா விட்டால் மோர்ன் மோர்கல், ரபாடா ஆகியோரை நம்பியே தென்ஆப்பிரிக்க களமிறங்க வேண்டிய நிலை உள்ளது.
பிலாண்டர், மொகாலி டெஸ்டில் 27 ஓவர்கள் வீசி 3 விக்கெட்டுக்கள் வீழ்த்தியிருந்தார் என்பது குறிப் பிடத்தக்கது. இதற்கிடையே பிலாண்டருக்குப் பதிலாக தென் ஆப்பிரிக்க அணியில் கெய்ல் அபாட் சேர்க்கப்பட்டுள்ளார். அவர் விரைவில் இந்தியா வந்து அணியுடன் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.