விளையாட்டு

பகலிரவு டெஸ்ட் தொடங்கியது: நியூஸிலாந்து 202 ரன்னில் சுருண்டது

செய்திப்பிரிவு

138 வருட கிரிக்கெட் வரலாற்றில் முதன்முறையாக பகலிரவு டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா-நியூஸி லாந்து அணிகள் நேற்று மோதின. பகலிரவு போட்டி என்பதால் பிங்க் நிற பந்து பயன்படுத்தப்பட்டது. போட்டியை 47,441 ரசிகர்கள் நேரில் கண்டுகளித்தனர். முதலில் பேட் செய்த நியூஸிலாந்து 202 ரன்னில் சுருண்டது. பிங்க் நிற பந்தில் முதல் விக்கெட்டை கைப்பற்றியவர் என்ற பெருமையை ஹசல்வுட் பெற்றார்.

வரலாற்று சிறப்பு மிக்க இந்த டெஸ்ட் போட்டி அடிலெய்டு மைதானத்தில் இரு அணிகள் இடையேயான 3 போட்டிகள் கொண்ட தொடரின் கடைசி ஆட்டமாக நேற்று தொடங்கியது. டாஸ் வென்று முதலில் பேட் செய்த நியூஸிலாந்து அணி 65.2 ஓவரில் 202 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. லதாம் 50, ஷான்டர் 31, வாட்லிங் 29, ராஸ் டெய்லர் 21, வில்லியம்சன் 22 ரன்கள் எடுத்தனர். ஆஸி. தரப்பில் மிட்செல் ஸ்டார்க், ஹசல்வுட் தலா 3 விக்கெட்டும், பீட்டர் சிடில், நாதன் லியான் தலா 2 விக்கெட்டும் கைப்பற்றினர். பிங்க் நிற பந்தில் முதல் விக்கெட்டை கைப்பற்றியவர் என்ற பெருமையை ஹசல்வுட் பெற்றார். அவர் 4வது ஓவரில் குப்திலை எல்பிடபிள்யூ முறையில் வெளியேற்றினார்.

முதல் இன்னிங்ஸில் பேட்டிங்கை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி நேற்றைய முதல் நாள் ஆட்டம் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 54 ரன்கள் எடுத்தது. பர்ன்ஸ் 14, வார்னர் 1 ரன்னில் ஆட்டமிழந்தனர். நியூஸி. தரப்பில் பவுல்ட், பிரேஸ்வெல் தலா 1 விக்கெட் கைப்பற்றினர். ஸ்மித் 24, வோஜஸ் 9 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளனர். ஆஸ்திரேலிய அணி 148 ரன்கள் பின்தங்கியுள்ள நிலையில் கைவசம் 8 விக்கெட்டுகளுடன் இன்று 2வது நாள் ஆட்டத்தை தொடர உள்ளது.

ஹியூஸூக்கு அஞ்சலி

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் பிலிப் ஹியூஸ் பவுன்சர் பந்தால் தாக்கப்பட்டு மரணம் அடைந்த ஓராண்டு நிறைவையொட்டி நேற்று அந்நாட்டு கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் ஹியூஸின் புகைப்படத்துக்கு மலரஞ்சலி செலுத்தினார்கள். அடி லெய்டில் நேற்று தொடங்கிய ஆஸ்தி ரேலியா - நியூசிலாந்து அணிக ளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டி யின்போதும் ஹியூஸூக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. மாலை 4.08 மணி அளவில் மைதானத்தில் உள்ள பெரிய திரையில் ஹியூஸ் தொடர்பான 20 நிமிட வீடியோ ஒளிபரப்பு செய்யப்பட்டது. ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியில் இணைந்த 408-வது வீரர் என்பதை குறிக்கும் வகையில் 408 என்ற எண்ணுடன் பிலிப் ஹியூஸ் படம் பெற்றிருந்தது.

SCROLL FOR NEXT