உலகக் கோப்பை போட்டியில் போர்ச்சுகல் அணி தனது முதல் ஆட்டத்தில் 0-4 என்ற கோல் கணக்கில் ஜெர்மனியிடம் கண்ட படுதோல்வியில் இருந்து இன்னும் மீளவில்லை. இந்த நிலையில் அந்த அணியின் ஸ்டிரைக்கர் ஹியூகோ அல்மெய்டா, பின்கள வீரர் ஃபேபியோ சென்ட்ரோவ் ஆகியோர் காயமடைந்துள்ளது கவலையை ஏற்படுத்தியுள்ளது.
ஜெர்மனிக்கு எதிரான ஆட்டத்தின்போது 65-வது நிமிடத்தில் காலில் ஏற்பட்ட காயம் காரணமாக களத்தில் இருந்து வெளியேறினார் சென்ட்ரோவ். அவர் காயத்திலிருந்து மீள்வதற்கு இன்னும் 10 நாள்கள் ஆகும் என தெரிகிறது.
தசைப்பிடிப்பால் பாதிக்கப் பட்டுள்ள அல்மெய்டா வரும் 22-ம் தேதி நடைபெறவுள்ள அமெரிக் காவுக்கு எதிரான ஆட்டத்தில் பங்கேற்பது சந்தேகமே. அது தொடர்பாக பயிற்சியாளர் பென்டோ கூறுகையில், “அல்மெய் டாவுக்கு தசைப்பகுதியில் இரு காயங்கள் ஏற்பட்டுள்ளன. அது குணமடைய கொஞ்சம் கால அவகாசம் தேவை. மேம்போக்காக பார்த்து எதையும் சொல்லி விட முடியாது. காயம் எளிதானதாக தெரியவில்லை. வீரர்கள் விளையாடுவதில் சிக்கல் ஏற்பட்டால், சரியான மாற்று வீரர்களோடு களமிறங்குவோம்” என்றார்.
கேப்டன் ரொனால்டோ காயத்தி லிருந்து தற்போதுதான் மீண்டு வந்துள்ளார். இந்த நிலையில் புதிதாக இருவர் காயமடைந் திருப்பதும், பெப்பே ரெட்கார்டு காரணமாக அடுத்த ஆட்டத்தில் விளையாட முடியாததும் போர்ச் சுகல் அணிக்கு பெரும் பின்னடை வாக அமைந்துள்ளது.