அகமதாபாத்தில் நடந்து வரும் இந்தியாவுக்கு எதிரான 4-வது டி20 போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.
இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டி20 போட்டித் தொடர் நடந்து வருகிறது. இதில் இங்கிலாந்து அணி 2 போட்டிகளிலும், இந்திய அணி ஒரு போட்டியலும் வென்றுள்ளன. இதில் இங்கிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் இருக்கிறது.
4-வது டி20 போட்டி இன்று நடக்கிறது. இந்தப் போட்டியில் இந்திய அணி வெல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. இதில் கோலிப் படை தோற்கும் பட்சத்தில் தொடரை இழக்க நேரிடும் என்பதால், வெற்றிக்காக கடுமையாப் போராடும்.
இதில் டாஸ் வென்ற இங்கிலந்து அணியின் கேப்டன் இயான் மோர்கன் பீல்டிங்கைத் தேர்வு செய்தார். இங்கிலாந்து அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. 3-வது ஆட்டத்தில் ஆடிய அதே வீரர்கள் இதில் மீண்டும் களமிறங்குகின்றனர்
இந்திய அணியில் இரு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. காயம் காரணமாக இஷான் கிஷனுக்குப் பதிலாக சூர்யகுமார் யாதவும், யஜுவேந்திர சஹலுக்கு பதிலாக ராகுல் சஹர் சேர்க்கப்பட்டுள்ளார்.
ஆடுகளம் எப்படி?
முதல் டி20 போட்டி நடந்த ஆடுகளத்தில்தான் இந்தப் போட்டி நடக்கிறது. சுழற்பந்துவீ்ச்சுக்கு சாதகமான ஆடுகளம், பேட்ஸ்மேன் செட்டில் ஆவதற்கு நேரம் ஆகும், ஆனால் நின்றுவிட்டால் நல்ல ஸ்கோர் செய்ய முடியும். கடந்த 3 போட்டிகளிலேயே சிறந்த ஆடுகளமாக இதுதான் இருக்கிறது. முதலில் பேட்டிங் செய்யும் அணி எவ்வளவு ரன்களை ஸ்கோர் செய்தாலும் சேஸிங் செய்யும் அளவுக்கு ஆடுகளம் ஒத்துழைக்கும்.