விளையாட்டு

ஏடிபி டூர் பைனல்ஸ் போட்டி: பெடரரை வீழ்த்தி 4வது முறையாக பட்டம் வென்றார் ஜோகோவிக்

செய்திப்பிரிவு

ஏடிபி டூர் பைனல்ஸ் இறுதிப்போட்டி யில் ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் பெடரரை வீழ்த்தி நம்பர் ஒன் வீரரான செர்பியாவின் ஜோகோ விக் பட்டம் வென்றார். ஏடிபி டூர் பைனல்ஸில் அவர் தொடர்ச்சியாக பட்டம் வெல்வது இது 4வது முறை யாகும்.

லண்டனில் ஏடிபி டூர் பைனல்ஸ் போட்டி நடைபெற்றது. தரவரிசையில் முதல் 8 இடங்களில் உள்ள வீரர்கள் பங்கேற்ற இந்த தொடரின் இறுதிப்போட்டியில் நம்பர் ஒன் வீரரான செர்பியாவின் ஜோகோவிக், 3ம் நிலை வீரரான ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் பெடரரை எதிர்த்து விளையாடினார்.

இதில் ஜோகோவிக் 6-3, 6-4 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று தொடர்ச்சியாக 4வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றார். இந்த தொடரின் 46 வருட வரலாற் றில் தொடர்ந்து 4 முறை வீரர் ஒருவர் பட்டம் வெல்வது இதுவே முதன்முறையாகும். ஏடிபி டூர் பைனல்ஸில் ரோஜர் பெடரர் 6 முறையும், பீட்சாம்ப்ராஸ் (அமெரிக்கா), இவான் லென்டில் (செக்கோஸ்லோவாகியா) ஆகி யோர் தலா 5 முறை பட்டம் வென்றுள்ளனர்.

ஏடிபி டூர் பைனல்ஸில் பட்டம் வென்றதையும் சேர்த்து ஜோகோ விக் இந்த ஆண்டில் 11 கோப்பை களை கைப்பற்றியுள்ளார். இதில் 2 கிராண்ட்ஸ்லாம் பட்டமும் அடங் கும். மேலும் இந்த சீசனில் அவர் மொத்தம் 88 ஆட்டங்களில் பங் கேற்று 82 வெற்றிகளை பதிவு செய்துள்ளார்.

ஏடிபி டூர் பைனல்ஸில் பட்டம் வென்றதன் மூலம் 1300 புள்ளிக ளுடன் ரூ.13.67 கோடி பரிசுத் தொகையையும் ஜோகோவிக் பெற்றார். இந்த சீசன் முடிவில் ஜோகோவிக் 16,585 புள்ளிக ளுடன் தொடர்ந்து முதலி டத்தை தக்கவைத்துக் கொண்டுள் ளார். பெடரர் தோல்வியடைந்ததால் இங்கிலாந்தின் ஆண்டி முர்ரே 8670 புள்ளிகளுடன் 2வது இடத்தை பிடித்துள்ளார். இவர் தரவரிசையில் ஆண்டு இறுதியில் 2வது இடத்தை கைப்பற்றுவது இதுவே முதன்முறையாகும். பெடரர் 8265 புள்ளிகளுடன் 3வது இடத்தில் உள்ளார்.

வெற்றி குறித்து ஜோகோவிக் கூறும்போது, "இந்த சாதனையை எனது அணியினருடன் நிகழ்த்தி யதில் பெருமை அடைகிறேன். இந்த சீசன் தான் எனது வாழ்நாளில் சிறந்தது. என்னுடைய குடும்பம் மற்றும் எனது குழுவினரின் ஆதரவு இல்லையென்றால் நான் எங்கு இருந்திருப்பேன் என்பதே எனக்கு தெரியாது" என்றார்.

பெடரர் கூறும்போது, "என்னால் முடிந்த அளவுக்கு சிறப்பான ஆட் டத்தை வெளிப்படுத்தினேன். ஆனால் வெற்றிக்கு ஜோகோவிக் தகுதியானவர் தான்" என்றார்.

ஜோகோவிக்கிடம் பெடரர் இறுதிப்போட்டிகளில் தோல்வி யடைந்து கோப்பையை பறிகொடுப் பது இது 12வது முறையாகும். இதில் 2 கிராண்ட்ஸ்லாம் போட்டி யும் அடங்கும்.

SCROLL FOR NEXT