விளையாட்டு

குத்துசண்டையில் வெற்றி: விஜேந்தர் மகிழ்ச்சி

செய்திப்பிரிவு

தொழில் முறை குத்துசண்டை போட்டியின் 2-வது சுற்றில் வெற்றி பெற்றது குறித்து இந்திய வீரர் விஜேந்தர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

தொழில்முறை குத்துசண்டை போட்டியில் டப்ளின் நகரில் நேற்று முன்தினம் நடந்த 2-வது சுற்று போட்டியில் இந்தியாவின் முன்னணி குத்துசண்டை வீரரான விஜேந்தர் இங்கிலாந்தின் டீன் கில்லனை நாக் அவுட் முறையில் வென்றார். இப்போட்டியில் 3 நிமிடங்களுக்குள் அவர் வெற்றி யை ருசித்தார்.

இந்த வெற்றி குறித்து நிருபர்களிடம் நேற்று விஜேந்தர் கூறியதாவது: இப்போட்டியில் நான் நினைத்ததை விட மிக விரைவாக எனக்கு வெற்றி கிடைத்துவிட்டது. குத்துசண்டை யில் உலக சாம்பியனாக வேண்டும் என்பதே என் லட்சியம் அந்த லட்சியத்தை அடைய நான் இன்னும் பல போட்டிகளில் வெல்லவேண்டி உள்ளது. அடுத்தடுத்த போட்டிகளில் இன்னும் சிறப்பாக செயல்பட முடியும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. இந்தியாவின் இளம் குத்துசண்டை வீரர்கள் மன உறுதியுடன் உழைத்தால் இதுபோன்ற சர்வதேச போட்டி களில் ஜெயிக்க முடியும். எனக்கு ஆதரவு அளித்துவரும் ரசிகர்கள் அனைவருக்கும் என் நன்றி.

இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT