பாகிஸ்தானுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி 5 விக்கெட் இழப்புக்கு 355 ரன்கள் குவித்தது.
4 போட்டிகள் கொண்ட தொடரில் 2-1 என இங்கிலாந்து முன்னிலை வகித்த நிலையில் நேற்று கடைசி போட்டி துபையில் நடைபெற்றது. டாஸ் வென்று முதலில் பேட் செய்த இங்கிலாந்து ஆரம்பம் முதலே அதிரடியாக ஆடியது. தொடக்க வீரர்களில் ஒருவரான ராய் 117 பந்தில், 1 சிக்ஸர், 8 பவுண்டரிகளுடன் 102 ரன்னும், அடுத்து வந்த ஜோ ரூட் 71 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
கடைசி கட்டத்தில் ஜாஸ் பட்லர் 46 பந்தில் சதம் அடித்து மிரட்டினார். அவர் 52 பந்தில், 8 சிக்ஸர், 10 பவுண்டரிகளுடன் 116 ரன் விளாச 50 ஓவரில் இங்கிலாந்து அணி 5 விக்கெட் இழப்புக்கு 355 ரன் குவித்தது. பட்லர் 46 பந்தில் சதம் அடித்ததின் மூலம் குறைந்த பந்தில் சதம் அடித்த முதல் இங்கிலாந்து வீரர் என்ற சாதனையை படைத்தார். உலக அளவில் விரைவாக அடிக்கப் பட்ட 8வது சதம் இதுவாகும்.