விளையாட்டு

உலக ஜூனியர் பாட்மிண்டன்: சிறில் வர்மாவுக்கு வெள்ளி பதக்கம்

பிடிஐ

உலக ஜூனியர் பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டிகள் பெரு நாட்டின் லிமா நகரில் நடைபெற்றது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் சிறில் வர்மா, இறுதி போட்டியில் சீன தைபேவின் ஷியா ஹங் லூவை எதிர்த்து ஆடினார். இதில் முதல் செட்டை சிறில் வர்மா 21-17 என கைப்பற்றினார். 2வது செட்டை 10-21 இழந்தார்.

கடைசி செட்டையும் 7 21 என சிறில் வர்மா பறிகொடுத்தார். முடிவில் 21-17, 10-21, 7-21 என தோல்வி அடைந்தார். இந்த ஆட்டம் 50 நிமிடங்கள் நடைபெற்றது. 2வது இடம் பிடித்த அவருக்கு வெள்ளி பதக்கம் வழங்கப்பட்டது. ஷியா ஹங் லூ தங்கப்பதக்கம் வென்றார்.

15 வயதான சிறில் வர்மா கோபிசந்த் அகாடமியில் பயிற்சி பெற்றவர் ஆவார். உலக ஜூனியர் பாட்மிண்டன் போட்டிகளில் இதற்கு முன்னர் இந்தியாவின் சாய்னா நெவால், பி.வி.சிந்து, குருசாய் தத், பிரணாய், ஷமீர் வர்மா ஆகியோரும் பதக்கங்கள் வென்றுள்ளனர். இந்த பட்டியலில் தற்போது சிறில் வர்மாவும் இணைந்துள்ளார்.

SCROLL FOR NEXT