விளையாட்டு

பார்முலா நம்பர் ஒன் கார் பந்தயம்: ரோஸ்பெர்க் 2வது இடம்

செய்திப்பிரிவு

இந்த ஆண்டுக்கான பார்முலா நம்பர் ஒன் கார்பந்தயம் 19 சுற்றுகளாக நடத்தப்பட்டு வரு கிறது.

இதன் 16வது சுற்றிலேயே இங்கிலாந்தின் லீவிஸ் ஹாமில்டன் (மெர்சிடஸ் அணி) சாம்பியன் ஆனார். இந்நிலையில் எஞ்சிய சுற்றுகள் தொடர்ந்து நடைபெற்றது. 18வது சுற்று பந்தயம் பிரேஸிலில் நேற்று முன்தினம் நடைபெற்றது.

இதில் ஜெர்மனியின் ரோஸ்பெர்க் (மெர்சிடஸ் அணி) முதலிடம் பிடித்தார். அவர் பந்தய தூரத்தை 1 மணி நேரம் 31 நிமிடங்கள் 9.090 விநாடிகளில் கடந்தார். 2வது இடத்தை லீவிஸ் ஹாமில்டனும், 3வது இடத்தை பெர்ராரி அணியின் செபாஸ்டின் வெட்டலும் (இங்கிலாந்து) பிடித்தனர்.

இந்த வெற்றியால் 297 புள்ளிகளுடன் ரோஸ்பெர்க் இந்த ஆண்டுக்கான பந்தயத்தில் 2வது இடத்தை பிடித்தார். கடைசி சுற்று பந்தயம் வரும் 29ம் தேதி அபுதாபியில் நடைபெறுகிறது.

SCROLL FOR NEXT