விளையாட்டு

பெங்களூரு டெஸ்ட் போட்டி: 2-ம் நாள் ஆட்டம் மழையால் ரத்து

பிடிஐ

இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையேயான 2-வது டெஸ்ட் போட்டியின் 2-ம் நாள் ஆட்டம் மழையால் ரத்து செய்யப்பட்டது.

இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகளிடையேயான 2-வது டெஸ்ட் போட்டி பெங்களூருவில் நடைபெற்று வருகிறது. இப்போட் டியில் தென் ஆப்பிரிக்க அணி தனது முதல் இன்னிங்ஸில் 214 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதைத் தொடர்ந்து ஆடிய இந்திய அணி முதல் நாள் ஆட்டத்தின் இறுதியில் தனது முதல் இன்னிங் ஸில் விக்கெட் இழப்பின்றி 80 ரன்களை எடுத்திருந்தது.

ஷிகர் தவண் 45 ரன்களுடனும், முரளி விஜய் 28 ரன்களுடனும் ஆடிக் கொண்டிருந்தனர். இந்நிலையில் இந்த இரு அணிகளிடையேயான 2-வது நாள் ஆட்டம் நேற்று மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது.

இன்றைய தினமும் பெங்க ளூருவில் மழை பெய்யலாம் என்று வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரித்துள்ளது. எனவே 3-ம் நாள் ஆட்டமும் மழையால் பாதிக்கப்பட அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.

SCROLL FOR NEXT