விளையாட்டு

4-வது டெஸ்ட் போட்டி: டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு; பும்ராவுக்கு பதில் சிராஜ் இறக்கம்

ஏஎன்ஐ

இந்தியாவுடனான 4வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளது.

இரு அணிகள் இடையிலான 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி 2-1 எனமுன்னிலை வகிக்கும் நிலையில் கடைசி டெஸ்ட் போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திரமோடி மைதானத்தில் தொடங்கியது.

இதே மைதானத்தில் நடைபெற்ற 3-வது டெஸ்ட் போட்டி 2 நாட்களில் முடிவடைந்திருந்தது. பகலிரவாக நடத்தப்பட்ட அந்தப் போட்டியில் இந்திய அணி 10 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டிருந்தது. இந்த ஆட்டத்தில் தோல்வியடைந்ததால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பை இங்கிலாந்து அணி இழந்தது.

இந்நிலையில், ஜூன் மாதம் நடைபெற உள்ள ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற வேண்டுமானால் இங்கிலாந்து அணிக்கு எதிராக இன்று தொடங்கும் கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வியை சந்திக்காமல் இருக்க வேண்டும். இதனால், இந்திய அணி நெருக்கடியுடன் களமிறங்குகிறது.

பும்ராவுக்குப் பதிலாக களமிறங்கும் சிராஜ்

இரு அணியிலும் சிறிய அளவில்மாற்றங்கள் உள்ளன. இந்திய அணியில் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரீத் பும்ரா விலகி உள்ளதால் அவருக்குப் பதிலாக முகமது சிராஜ் இடம்பெற்றுள்ளார்.

இதேபோல், இங்கிலாந்து அணியில் ஸ்டூவர்ட் போர்டு, ஜோர்ஃபா ஆர்ச்சருக்குப் பதிலாக கூடுதல் சுழற்பந்து வீச்சாளராக டாஸ் டொமினிக் பெஸ், டான் லாரன்ஸ் களமிறக்கப்பட்டுள்ளனர்.

SCROLL FOR NEXT