விளையாட்டு

ஸ்குவாஸ் தரவரிசை: ஜோஸ்னா, தீபிகா முன்னேற்றம்

பிடிஐ

உலக ஸ்குவாஷ் தர வரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. பெண்கள் பிரிவில் இந்தியாவின் தீபிகா பாலிகல் 5 இடங்கள் முன்னேறி 14வது இடத்தை பிடித்துள்ளார். மற்றொரு வீராங் கனையான ஜோஸ்னா சின்னப்பா 3 இடங்கள் முன்னேறி 17வது இடத்தில் உள்ளார்.

ஜோஸ்னா சமீபத்தில் கத்தார் போட்டியில் நம்பர் ஒன் வீராங்க னையான எகிப்தின் ரனீமை வீழ்த்தி இருந்தார்.

தீபிகா பாலிகல் கடந்த மாதம் நடந்த அமெரிக்க ஓபன் ஸ்குவாஷ் போட்டியில் சிறப்பாக செயல்பட்டிருந்தார்.இதனால் தரவரிசை பட்டியலில் இருவரும் முன்னேற்றம் கண்டுள்ளனர்.

ஆண்கள் பிரிவில் சவுரவ் கோஷல் ஒரு இடம் பின் தங்கி 17வது இடத்திலும் மகேஷ் 57வது இடத்திலும் உள்ளனர்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT