ஸ்பெயினில் பில்பாவோ மாஸ்டர்ஸ் செஸ் போட்டி நடை பெற்றது. இதில் நடப்பு சாம்பி யனான விஸ்வநாதன் ஆனந்த், அமெரிக்காவின் வெஸ்லே, ஆலந்தின் அனிஷ் கிரி, சீனாவின் லைரென் டிங் ஆகியோர் பங்கேற்றனர். ரவுண்ட் ராபின் முறையில் போட்டிகள் நடைபெற்றன. நேற்று கடைசி சுற்று போட்டிகள் நடந்தது.
4 டிரா, 1 தோல்வியுடன் 4 புள்ளிகள் பெற்ற விஸ்வநாதன் ஆனந்த் கடைசி சுற்றில் சீனாவின் லைரென் டிங்கை எதிர்கொண்டார். 69வது நகர்த்தலின் போது ஆட்டம் டிரா ஆனது.
வெஸ்லே, அனிஷ் கிரி மோதிய ஆட்டமும் டிராவில் முடிந் தது.
6 சுற்றுகளின் முடிவில் இருவரும் தலா 8 புள்ளிகள் பெற்றிருந் ததால் வெற்றியை தீர்மானிக்க டைபிரேக்கர் கடை பிடிக்கப்பட்டது.
இதில் வெஸ்லே வெற்றி பெற்று முதலிடத்தை பிடித்தார். அனிஷ் கிரிக்கு 2வது இடம் கிடைத்தது. நடப்பு சாம்பியன் பட்டத்துடன் கள மிறங்கிய விஸ்வநாதன் ஆனந்த் 3வது இடத்தையும், லைரென் டிங் 4வது இடத்தையும் பிடித்தனர்.