அர்ஜூன் டெண்டுல்கர் 
விளையாட்டு

ஐபிஎல் ஏல பட்டியலில் அர்ஜுன் டெண்டுல்கர் அடிப்படை விலையாக ரூ.20 லட்சம் நிர்ணயம்

செய்திப்பிரிவு

2021-ம் ஆண்டுக்கான ஐபிஎல் டி 20 தொடருக்கான ஏலத்தில் சர்வதேச, உள்நாட்டு வீரர்கள் உள்பட 292 வீரர்களின் பெயர்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. இதில் சச்சின் டெண்டுல்கர் மகன் அர்ஜுன் டெண்டுல்கர் சேர்க்கப்பட்டுள்ளார்.

14-வது ஐபிஎல் டி20 போட்டிக்கான ஏலம் சென்னையில் வரும் 18-ம் தேதி நடக்கிறது. இந்த ஏலத்தையொட்டி 8 அணிகளும் தாங்கள் தக்கவைக்கும் வீரர்கள், விடுவிக்கப்பட்ட வீரர்கள் பட்டியலை கடந்த மாதம் வெளியிட்டன.

இதைத் தொடர்ந்து 1,114 சர்வதேச, உள்நாட்டு வீரர்கள் ஏலத்தில்பங்கேற்க விருப்பம் தெரிவித்து பெயர்களைப் பதிவு செய்திருந்தனர். இதில் 8 அணிகளும் 292 வீரர்களை உள்ளடக்கிய இறுதிப் பட்டியலை வெளியிட்டுள்ளன. இதில் சச்சின் டெண்டுல்கரின் மகனான அர்ஜூன் டெண்டுல்கரின்பெயர் இடம் பெற்றுள்ளது. 21 வயதான அர்ஜூன் ஆல்ரவுண்டர் வரிசையில் உள்ளார். அவரது அடிப்படை விலையாக ரூ.20 லட்சம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஹர்பஜன் சிங், கேதார் ஜாதவ் ஆகியோருக்கு ரூ.2 கோடி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு வீரர்களில், மேக்ஸ்வெல், ஸ்டீவ் ஸ்மித், ஷகிப் அல் ஹசன்,சாம்பில்லிங்ஸ், லியாம் பிளங்கெட்,மொயின் அலி ஜேஸன் ராய், மார்க் உட் ஆகியோர் ரூ.2 கோடி அடிப்படை விலைப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

SCROLL FOR NEXT