விளையாட்டு

ஐஎஸ்எல் கால்பந்து: கொல்கத்தா அணி தோல்வி

செய்திப்பிரிவு

ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் கொல்கத்தாவில் நேற்று நடை பெற்ற ஆட்டத்தில் அட்லெட்கோ டி கொல்கத்தா-நார்த் ஈஸ்ட் யுனைட்டெடு அணிகள் மோதின. கொல்கத்தா 4-2-3-1 என்ற பார்மட்டிலும், நார்த் ஈஸ்ட் யுனைட்டெடு 4-3-3 என்ற பார்மட்டிலும் களமிறங்கின. ஆட்டத்தின் 9வது நிமிடத்தில் நார்த் ஈஸ்ட் யுனைட்டெடு அணி முதல் கோலை அடித்தது. அந்த அணிக்கு கிடைத்த பெனால்டி வாய்ப்பை சிமோவ் கோலாக மாற்றினார். கொல்கத்தா அணியால் இதற்கு உடனடியாக பதிலடி கொடுக்க முடியவில்லை.

முதல் பாதியில் நார்த் ஈஸ்ட் யுனைட்டெடு அணி 1-0 என முன்னிலை வகித்தது. 2வது பாதியிலும் கொல்கத்தா அணியால் கோல் அடிக்க முடியவில்லை. முடிவில் நார்த் ஈஸ்ட் யுனைட்டெடு அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியால் அந்த அணி புள்ளிகள் பட்டியலில் 8வது இடத்தில் இருந்து 7வது இடத்துக்கு முன்னேறியது.

ஐஎஸ்எல் தொடரில் இன்று புனேவில் இரவு 7 மணிக்கு நடை பெறும் ஆட்டத்தில் புனே-கோவா அணிகள் மோதுகின்றன.

SCROLL FOR NEXT