விளையாட்டு

ஏ டிவிசன் லீக் கைப்பந்து: செயின்ட் ஜோசப்பை வீழ்த்தியது ஐசிஎப்

செய்திப்பிரிவு

சென்னை மாவட்ட கைப்பந்து சங்கம் சார்பில் எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகம் ஆதரவுடன் ஏ டிவிசன் லீக் கைப்பந்து போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நேற்று தொடங்கியது.

இந்த போட்டியில் வருமானவரி, எஸ்.ஆர்.எம், ஐ.சி.எப், தெற்கு ரயில்வே, சுங்க இலாகா, பனிமலர், செயின்ட் ஜோசப்ஸ், இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, தமிழ்நாடு போலீஸ் ஆகிய 10 அணிகள் பங்கேற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா ஒரு முறை லீக் ஆட்டத்தில் மோதும். லீக் முடிவில் புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தை பிடிக்கும் அணி சாம்பியன் பட்டத்தை வெல்லும்.

இந்த போட்டியில் கடைசி 2 இடங்களை பெறும் அணிகள் பி டிவிசன் லீக் போட்டிக்கு தகுதி இறக்கம் செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது. போட்டியில் வெற்றி பெறும் அணிகளுக்கு ரூ.3 லட்சம் ரொக்கப்பரிசு வழங்கப்படுகிறது. தொடக்க நாளான நேற்று நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் ஐசிஎப்-செயின்ட் ஜோசப் அணிகள் மோதின. இதில் ஐசிஎப் 25-23, 25-22, 22-25, 25-20 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றது.

மற்ற ஆட்டங்களில் பனிமலர் அணி 20-25. 25-22, 25-20. 25-19 என்ற செட் கணக்கில் தெற்கு ரயில்வே அணியையும் வருமான வரி அணி 27-25, 25-19, 25-17 என்ற செட் கணக்கில்த தமிழ்நாடு போலீஸ் அணியையும் வீழ்த்தின.

SCROLL FOR NEXT