2018 உலகக்கோப்பை கால்பந்து போட்டிக்கான தகுதி சுற்று ஆட்டங்கள் பல்வேறு நாடுகளில் நடைபெற்று வருகிறது. தென் அமெரிக்க கண்டங்களுக்கிடையேயான போட்டியில் நேற்று பிரேஸில்-பெரு அணிகள் மோதின. இதில் பிரேஸில் அணி 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. அந்த அணி தரப்பில் கோஸ்டா 22வது நிமிடத்திலும், அகுஸ்டோ 57வது நிமிடத்திலும், பிலிப் லூயிஸ் 76வது நிமிடத்திலும் கோல் அடித்தனர்.
மற்றொரு ஆட்டத்தில் அர் ஜென்டினா 1-0 என்ற கணக்கில் கொலம்பியாவை தோற்கடித்தது. அந்த அணியின் லூக்காஸ் பிக்லியா முதல் பாதியில் கோல் அடித்தார். அர்ஜென்டினா அணி பெறும் முதல் வெற்றி இதுவாகும். அந்த அணி 4 ஆட்டத்தில் 1 வெற்றி, ஒரு தோல்வி, 2 டிராவை சந்தித்துள்ளது.