விளையாட்டு

மக்காவு ஓபன்: சிந்துவுக்கு சாம்பியன் பட்டம்

பிடிஐ

மக்காவு ஓபன் பாட்மிண்டன் போட்டியில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து சாம்பியன் பட்டம் வென்றார். நேற்று நடந்த இறுதி ஆட்டத்தில் பி.வி.சிந்து, ஜப்பானின் மினாட்சு மிடானியை 21 9, 21 23, 21 14 என்ற செட் கணக்கில் போராடி வீழ்த்தினார்.

இப்போட்டி ஒரு மணி 6 நிமிடங்கள் நடைபெற்றது. மக்காவு ஓபன் பாட்மிண்டன் போட்டியில் சிந்து சாம்பியன் பட்டம் வெல்வது இது மூன்றாவது முறையாகும்.

சாம்பியன் பட்டம் வென்ற சிந்துவுக்கு 1 லட்சத்து 20 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் பரிசாக வழங்கப்பட்டது.

SCROLL FOR NEXT