இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி பேட்ஸ்மேனான ரோஹித் சர்மா(28), விளையாட்டு நிறுவன மேலாளரான ரித்கா (28) என்பவரை கடந்த 6 ஆண்டுகளாக காதலித்து வந்தார். இவர்களது திருமண நிச்சயதார்த்தம் கடந்த மே மாதம் மும்பையில் நடந்தது. இந்நிலையில் தற்போது திருமண தேதி முடிவாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தற்போது தென் ஆப்பிரிக்கா தொடரில் ரோஹித் சர்மா விளையாடி வருகிறார். அந்த அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் டிசம்பர் 7ம் தேதியுடன் முடிவடைகிறது. அதன் பிறகு இந்திய அணி ஜனவரி மாதம் தான் ஆஸ்திரேலியா சென்று ஒருநாள் போட்டி தொடரில் விளையாடுகிறது. இந்த இடைப்பட்ட காலத்தில் திருமணத்தை நடத்த முடிவு செய்துள்ளனர்.
டிசம்பர் 13 ம்தேதி ரோஹித் சர்மா ரித்திகா திருமணம் மும்பை பாந்த்ராவில் உள்ள நட்சத்திர ஓட்ட லில் நடைபெறுகிறது. ஹர்பஜன்சிங் திருமண விழா 5 நாட்கள் நடைபெற்றது போல இல்லாமல் எளிய முறையில் ஒன்றரை நாளில் திருமணத்தை நடத்த இரு வீட்டினரும் முடிவு செய்துள்ளனர். திருமண நிகழ்ச்சியில் சச்சின் மற்றும் இந்திய அணி வீரர்கள் பங்கேற்பார்கள் என தெரிகிறது.