விளையாட்டு

முன்னாள் காதலிக்கு தொந்தரவு: பால் காஸ்கோயின் நீதிமன்றத்தில் ஆஜர்

செய்திப்பிரிவு

இங்கிலாந்து கால்பந்து அணியின் முன்னாள் வீரர் பால் காஸ்கோயின்(48). வர் காஸா என்றும் அழைக்கப்பட்டார். இவரது முன்னாள் காதலி அமன்டா தாமஸ்(44). இருவருக்குமான தொடர்பு கடந்த ஆண்டுடன் முடிவடைந்துள்ளது.

அதன்பின்னர் அமன்டா, ஆன்டி ஸ்டோன் என்பவருடன் வசித்து வருகிறார். இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் காஸ்கோயின், டுவிட்டர் மற்றும் செல்போன் மூலம் அமன்டாவிற்கு 13 முறை தொல்லை கொடுத்துள்ளார். நான் உன்னை அழிக்கப்போகிறேன், சுத்தியலால் தாக்குவேன் என டுவிட்டரில் மிரட்டியுள்ளார்.

மேலும் கடந்த ஜூன் மாதம் அமன்டா தற்போது வசித்து வரும் ஆன்டி ஸ்டோனிடம் பணியாற்றி வரும் புகைப்படக்காரர் ஸ்டீவன் செப்பர்டு என்பவரை தாக்கி அவரது விலையுர்ந்த கேமராவை சேதப்படுத்தியுள்ளார். இதுதொடர்பான வழக்கு நேற்று இங்கிலாந்தில் உள்ள புருன்மவுத் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது காஸ்கோயின் ஆஜரானார். தன்மீதான குற்றச் சாட்டை காஸ்கோயின் ஒப்புக் கொண்டார்.

SCROLL FOR NEXT