இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) தலைவராக சஷாங்க் மனோகர் 2-வது முறையாக தேர்ந்தெடுக்கப்பட் டுள்ளார்.
பிசிசிஐ தலைவராக இருந்த டால்மியா கடந்த மாதம் மரணமடைந்தார். இதைத் தொடர்ந்து புதிய தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான பிசிசிஐ-யின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் மும்பையில் நேற்று நடந்தது. இந்தக்கூட்டத்தில் சஷாங்க் மனோகர், பிசிசிஐ தலைவராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட் டார். டால்மியாவின் மகன் அவிஷேக், மேற்கு வங்க கிரிக்கெட் சங்கத் தலைவர் சவுரவ் கங்குலி, திரிபுரா கிரிக்கெட் சங்கத்தின் சவுரவ் தாஸ் குப்தா, அசாம் கிரிக்கெட் சங்கத்தின் கவுதம் ராய், ஒடிசா கிரிக்கெட் சங்கத்தின் ஆஷிர்பாத் பெஹரா, ஜார்க்கண்ட் கிரிக்கெட் சங்கத்தின் சஞ்சய் சிங் ஆகியோர் அவரது பெயரை முன்மொழிந்தனர். இந்த கூட்டத்தில் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத் தலைவர் சீனிவாசன் கலந்து கொள்ளவில்லை.
58 வயதான சஷாங்க் மனோகர் இதற்கு முன்பு 2008 முதல் 2011 வரை பிசிசிஐ தலை வராக இருந்துள்ளார். கடந்த முறை அவர் தலைவராக இருந்த போதுதான் இந்திய கிரிக்கெட் அணி உலகக் கோப்பையை வென்றது என்பது குறிப்பிடத்தக் கது. நாக்பூரை சேர்ந்த வழக்கறிஞரான இவர், இதற்கு முன்பு பிசிசிஐயில் பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார்.
பிசிசிஐ தலைவராக தேர்ந் தெடுக்கப்பட்ட பிறகு நிருபர் களிடம் பேசிய அவர், “கிரிக்கெட் மீது ரசிகர்கள் கொண்டுள்ள காதலால் பிசிசிஐ ஒரு மிகப்பெரிய பிராண்டாக உருவாகியுள்ளது. விரும்பத்தகாத ஒரு சில சம்பவங் களால் தற்போது இதன் மீதான ரசிகர்களின் நம்பிக்கை ஆட்டம் கண்டுள்ளது. பிசிசிஐ அமைப்பை சீர்படுத்தி பழைய நம்பிக்கையை மீட்டெடுப்பது கிர்க்கெட் வாரிய உறுப்பினர்களின் கடமை.
அணியின் நலனை மீறி சொந்த நலனில் அக்கறை செலுத்தும் வீரர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் வாரிய உறுப்பினர்கள் மீதான புகார்களை விசாரிக்க குறை கேட்கும் ஆணையம் அல்லது நெறிமுறை அதிகாரி நியமிக்கப்படுவார்” என்றார்.