டபிள்யூடிஏ பைனல்ஸ் என்று அழைக்கப்படும் மகளிர் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப் பூரில் நடைபெற்று வருகிறது.
இதன் இரட்டையர் பிரிவில் முதல் நிலை ஜோடியான சானியா மிர்சா(இந்தியா)-மார்ட்டினா ஹிங் கிஸ் (ஸ்விட்சர்லாந்து) ஜோடி 6-4, 7-5 என்ற நேர்செட்டில் ஹங்கேரி யின் டிமியா பேபஸ்-பிரான்ஸின் கிறிஸ்டினாஜோடியை தோற் கடித்து அரையிறுதியில் நுழைந் தது. இந்த ஆட்டம் ஒன்றரை மணி நேரம் நடைபெற்றது. சானியா ஜோடிக்கு இந்த தொடரில் இது ஹாட்ரிக் வெற்றியாக அமைந்தது. மேலும் சர்வதேச போட்டிகளில் இந்த ஜோடிக்கு இது 20வது தொடர்ச்சியான வெற்றியாகும்.