விளையாட்டு

மாற்றுத் திறனாளி டேபிள் டென்னிஸ் வீராங்கனை பவீனா பட்டேலுக்கு சிறப்பு உபகரணம்

செய்திப்பிரிவு

ஒலிம்பிக்கை இலக்காக நிர்ணயித்து விளையாட்டு வீரர்களுக்கு பயிற்சி அளிக்கும் டாப்ஸ் திட்டத்தின் கீழ் டேபிள் டென்னிஸ் வீராங்கனை பவீனா பட்டேலுக்கு சிறப்பு உபகரணம் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

டாப்ஸ் திட்டத்தில் உள்ள விளையாட்டு வீரர்களின் நிதி தேவைகளுக்கு ஒப்புதல் அளிப்பதற்கான மிஷன் ஒலிம்பிக் செல்லின் கூட்டம் கடந்த மாதம் 29ம் தேதியன்று புதுடெல்லியில் நடைபெற்றது.

2020 நவம்பரில் டாப்ஸ் திட்டத்தில் இணைத்து கொள்ளப்பட்ட குஜராத்தைச் சேர்ந்த டேபிள் டென்னிஸ் வீராங்கனை பவீனா பட்டேலுக்கு ரூ.7.04 லட்சம் நிதி உதவிக்கு குழுவால் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

உலக அளவில் எட்டாவது இடம் பிடித்துள்ள பவீனா பட்டேல், டோக்கியோவில் நடைபெறவுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டிகளில் டேபிள் டென்னிஸ் விளையாடுவதற்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள முதல் இந்தியர் ஆவார்.

டேபிள் டென்னிஸ் சக்கர நாற்காலி, ரோபாட்: பட்டர்பிளை அமிக்கஸ் பிரைம், டேபிள் டென்னிஸ் சக்கர நாற்காலி மேஜை ஆகிய சிறப்பு உபகரணங்களுக்கு பவீனா பட்டேலுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

SCROLL FOR NEXT