தாய்லாந்து ஓபன் பாட்மிண்டன் தொடர் வரும் 12-ம் தேதி தொடங்குகிறது. இதில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து களமிறங்க உள்ளார்.
இந்த ஆண்டு டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டி நடைபெற உள்ளதால் அதற்கு முன்னதாக நடைபெறும் அனைத்து சர்வதேச போட்டிகளும் முக்கியத்தும் பெற்றுள்ளது. இந்நிலையில் இங்கிலாந்தில் தங்கியுள்ள சிந்து கூறியதாவது:
ஒலிம்பிக் போட்டிக்கு நான் நன்றாகத் திட்டமிட்டுள்ளேன், பதக்கத்தைப் பெற நிச்சயமாக எல்லோரும் 100 சதவீதம் கடினமான உழைப்பை கொடுக்கவே விரும்புவார்கள்.
டோக்கியோவில் பதக்கம் பெறுவதை நான் காண விரும்புகிறேன். அதற்காக நான் கடுமையாக உழைக்கிறேன். அது எளிதானது அல்ல என்று எனக்குத் தெரியும்.
இவ்வாறு பி.வி.சிந்து கூறினார்.