நியூசிலாந்து கிரிக்கெட் அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலியா சென்றுள்ளது. முதல் டெஸ்ட் நவம்பர் 5-ந்தேதி தொடங்க உள்ளது.
இந்நிலையில் ஆஸ்திரேலியா கிரிக்கெட் லெவன் அணிக்கு எதிராக மூன்று நாட்கள் பயிற்சி ஆட்டத்தில் நேற்று நியூசிலாந்து அணி மோதி யது. ஆஸ்திரேலியா கிரிக்கெட் லெவன் முதலில் பேட் செய்தது.
ஆரோன் பின்ச், கார்டெர்ஸ் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். இந்த ஜோடியை பிரிக்க நியூசிலாந்து வீரர்கள் 9 பேர் பந்து வீசிப் பார்த்தும் முடியவில்லை. இருவரும் முதல் நாள் முழுவதும் 91 ஓவர்கள் தாக்குப் பிடித்து ஆடி 376 ரன் சேர்த்தனர். இரட்டை சதம் அடித்த பின்ச் 214 ரன்னுடனும், கார்டெஸ் 156 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.