விளையாட்டு

பிரெஞ்சு ஓபன் இன்று தொடக்கம்: சாதிப்பார்களா சாய்னா, சிந்து?

பிடிஐ

பிரெஞ்சு ஓபன் சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் இன்று தகுதிச்சுற்றுடன் தொடங்குகிறது.

இதில் உலகின் முதல் நிலை வீராங்கனையான இந்தியாவின் சாய்னா நெவால், இந்தியாவின் இரண்டாம் நிலை வீராங்கனையான பி.வி.சிந்து, இந்தியாவின் முன்னணி வீரரான காந்த் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

உலக சாம்பியன்ஷிப்பில் இரு முறை வெண்கலம் வென்றவரான சிந்து, பிரெஞ்சு ஓபன் முதல் சுற்றில் சீனாவின் முன்னணி வீராங்கனையான வாங் ஷிக்ஸியானை சந்திக்கிறார். டென்மார்க் ஓபனில் 2-வது சுற்றோடு வெளியேறிய சாய்னா, தனது முதல் சுற்றில் காமன்வெல்த் நடப்பு சாம்பியனான கனடாவின் மிச்செல் லீயை சந்திக்கிறார்.

ஆடவர் பிரிவைப் பொறுத்தவரையில் உலகின் 5-ம் நிலை வீரரான இந்தியாவின் காந்த், தனது முதல் சுற்றில் சீனாவின் டியான் ஹுவெயையும், இந்தியாவின் எச்.எஸ்.பிரணாய், சீனாவின் லின் டானையும் சந்திக்கின்றனர். காமன்வெல்த் சாம்பியனான காஷ்யப், தகுதி நிலை வீரரை சந்திக்கிறார்.

மகளிர் இரட்டையர் பிரிவைப் பொறுத்தவரையில் இந்தியாவின் ஜுவாலா கட்டா-அஸ்வினி பொன்னப்பா ஜோடி தங்களின் முதல் சுற்றில் தாய்லாந்தின் ஜாங்கோல்பன்-ரவிந்தா ஜோடி யுடன் மோதுகிறது.

SCROLL FOR NEXT