இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் தனது நீண்ட நாள் தோழியும், பாலிவுட் நடிகையுமான கீதா பாஸ்ராவை மணக்கிறார். இவர்களுடைய திருமணம் வரும் 29-ம் தேதி ஜலந்தரில் நடக்கிறது.
கீதா பாஸ்ரா கடைசியாக தர்மேந்திராவுன் இணைந்து “செகன்ட் ஹேண்ட் ஹஸ்பன்ட்” என்ற இந்தி படத்தில் நடித்தார்.
ஹர்பஜன் சிங்-கீதா திருமணம் 5 நாட்கள் கொண்டாட்டத்துடன் நடைபெறவுள்ளது. திருமண விழாவில் பாலிவுட் நட்சத்தி ரங்கள், கிரிக்கெட் வீரர்கள் உள்ளிட்ட முக்கிய பிரபலங்கள் கலந்து கொள்கின்றனர். திருமண வரவேற்பு நிகழ்ச்சி டெல்லியில் நவம்பர் 1-ம் தேதி நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.