விளையாட்டு

பிரெஞ்சு ஓபன்: நடால் சாம்பியன்

செய்திப்பிரிவு

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில் 9-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றுள்ளார் உலகின் முதல் நிலை வீரரான ஸ்பெயினின் ரஃபேல் நடால்.

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடைபெற்ற இறுதியாட்டத்தில் நடால் 3-6, 7-5, 6-2, 6-4 என்ற செட் கணக்கில் உலகின் 2-ம் நிலை வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச்சை தோற்கடித்தார்.

பிரெஞ்சு ஓபனில் தொடர்ச்சியாக 5 முறை சாம்பியன் பட்டம் வென்றவர் என்ற சாதனையைப் படைத்துள்ள நடாலுக்கு, இது 14-வது கிராண்ட்ஸ்லாம் பட்டமாகும். இதன்மூலம் பீட் சாம்ப்ராஸின் சாதனையை (14 கிராண்ட்ஸ்லாம்) சமன் செய்துள்ளார் அவர் இன்னும் 3 கிராண்ட்ஸ்லாம் பட்டங்கள் வெல்லும்பட்சத்தில் அதிக கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவரான ரோஜர் ஃபெடரரின் சாதனையை சமன் செய்வார். பிரெஞ்சு ஓபனில் இதுவரை 67 ஆட்டங்களில் விளையாடியுள்ள நடால் ஒன்றில் மட்டும் தோல்வி கண்டுள்ளார்.

SCROLL FOR NEXT