வெற்றி முனைப்பில் ஆர்வமுடன் விளையாடிய பெண்கள் அணியினர். 
விளையாட்டு

மாநில சிட்டிங் வாலிபால் போட்டி: கடலூர், மதுரை அணிகளுக்கு சாம்பியன் பட்டம்

த.சத்தியசீலன்

மாநில சிட்டிங் வாலிபால் போட்டியில் கடலூர், மதுரை அணிகளுக்குச் சாம்பியன் பட்டம் வழங்கப்பட்டது.

தமிழ்நாடு பாரா ஒலிம்பிக் அசோசியேஷன் சார்பில், 8-வது மாநில அளவிலான சிட்டிங் வாலிபால் சாம்பியன்ஷிப் போட்டி, கோவையை அடுத்த பெரியநாயக்கன் பாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா வித்யாலயா உள் விளையாட்டு அரங்கில் இன்று நடைபெற்றது. இதில் 15 மாவட்ட அணிகள் கலந்துகொண்டு விளையாடின.

அதில் வெற்றி பெற்றவர்கள் விவரம்:

ஆண்கள் பிரிவு அரையிறுதி முதலாவது போட்டியில் திருவள்ளூர் அணி, தஞ்சை அணியை வென்றது. இரண்டாவது போட்டியில் தூத்துக்குடி அணி, கடலூர் அணியை வீழ்த்தியது.

மாநில சிட்டிங் வாலிபால் போட்டியில் விளையாடிய ஆண்கள் அணிகள்.

இறுதிச்சுற்று ஆண்கள் பிரிவில் கடலூர் அணி, தூத்துக்குடி அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. பெண்கள் பிரிவில் மதுரை அணி, கோவை அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தைத் தட்டிச் சென்றது.

போட்டிகளைத் தொடர்ந்து நடைபெற்ற பரிசளிப்பு விழாவில், பிஆர்ஜி அருண்குமார் எம்எல்ஏ, அம்மா சேவா சேரிட்டபிள் டிரஸ்ட் நிறுவனர் சோனாலி பிரதீப், டாக்டர் எஸ்.அழகேசன் ஆகியோர் பரிசுகளை வழங்கினர். முடிவில் டாக்டர் வி.ஆல்பர்ட் பிரேம்குமார் நன்றி கூறினார்.

SCROLL FOR NEXT