இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் தலைவா என்று ரஜினியின் பிறந்த நாளை முன்னிட்டு ட்வீட் செய்துள்ளார் சச்சின் டெண்டுல்கர்.
நடிகர் ரஜினிகாந்த் இன்று (டிசம்பர் 12) தனது 70-வது பிறந்த நாளைக் கொண்டாடி வருகிறார். அவருக்கு அரசியல் தலைவர்கள், திரையுலகப் பிரபலங்கள், ரசிகர்கள் எனப் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். ரஜினி தான் அரசியல் கட்சி தொடங்குவதை உறுதி செய்திருப்பதால், இந்தப் பிறந்த நாள் அவருக்கு முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், இந்திய கிரிக்கெட் நட்சத்திரமான சச்சின் டெண்டுல்கர் தனது ட்விட்டர் பதிவில், "இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் தலைவா.. நீண்ட ஆரோக்கியமான வாழ்க்கையைக் கடவுள் உங்களுக்கு ஆசிர்வதிக்கட்டும்" என்று தெரிவித்துள்ளார்.
சச்சின் பல்வேறு பேட்டிகளில் ரஜினி குறித்து மிகவும் சிலாகித்துப் பேசியுள்ளார். ரஜினியின் பணிவும் தன்னடக்கமும் தன்னை வியக்க வைத்தது எனவும், தான் பின்பற்றும் பல நபர்களுள் ரஜினியும் ஒருவர் எனவும் சச்சின் கூறியிருப்பது நினைவு கூரத்தக்கது.