இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் - பாலிவுட் நடிகை கீதா பாஸ்ராவின் திருமணம் இன்று ஜலந்தரில் நடைபெற உள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் சீனியர் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் (35) கடந்த சில ஆண்டுகளாக பாலிவுட் நடிகை கீதா பாஸ்ராவை (31) காதலித்து வந்தார். இதையடுத்து இருவருக் கும் திருமணம் செய்து வைக்க அவர்களது பெற்றோர் முடிவு செய்தனர். இதன்படி ஹர்பஜன் சிங்-கீதா பாஸ்ரா திருமணம் பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் அருகே பக்வாராவில் உள்ள நட்சத்திர ஒட்டலில் இன்று கோலாகலமாக நடைபெற உள்ளது. திருமணத் திற்காக பாஸ்ராவின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் லண்டனி லிருந்து வந்துள்ளனர்.
திருமணத்திற்காக பிரேத்யேக மாக அழைப்பிதழ் அச்சடிக்கப் பட்டிருந்தது. சிவப்பு நிற பெட்டியின் மையத்தில் தங்க நிறத்தில் உலோகத்தகடு பதிக்கப்பட்டு அதில் மணமக்களான ஹர்பஜன்-கீதா பஸ்ரா பெயரின் முதல் எழுத்து பொறிக்கப்பட்டிருந்தது. பெட்டியினுள் ‘ஓம்' என்ற எழுத்துடன் அழைப்பிதழ் இணைக் கப்பட்டிருந்தது. ஹர்பஜன்சிங் தனது திருமண அழைப்பிதழை பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இந்திய அணி வீரர்களுக்கு நேரில் சென்று வழங்கியிருந்தார்.
நேற்றுமுன்தினம் மெகந்தி நிகழ்ச்சியுடன் திருமண விழா தொடங்கியது. அன்றைய தினம் மாலை குருதாஸ் மான், மிகா சிங் ஆகியோரின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து நடைபெற்ற விருந்தில் பஞ்சாபி உணவு உட்பட 150க்கும் மேற்பட்ட உணவு வகைகள் பரிமாறப்பட்டது. ஜெர்மனி, பிரான்ஸ், லண்டன் ஆகிய நாடுகளில் இருந்து வரவழைக் கப்பட்டிருந்த புகழ் பெற்ற சமையல் கலைஞர்கள் உணவு வகைகளை தயார் செய்திருந்தனர்.
தொடர்ந்து நேற்று சங்கீத் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்சியின் போது நடைபெற்ற விருந்தில் ஜலந்தரின் பிரபல இனிப்பு வகைகளான பாதாம் பர்பி, அன்ஜிர் பர்பி, கஜூபர்பி, லட்டு, ஷாகி பாதாம் பின்னி, ஷனா பர்பி, ஷாகி மதுபாக், ஷாகி பட்டிஸா, சூப்பர் சாப்ட் மில்க் உள்ளிட்டவை இடம் பெற்றிருந்தது.
இன்று திருமணம் முடிந்ததும் பிரமாண்ட விருந்துக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திருமண விழாவில் ஹர்பஜனின் நெருங்கிய நண்பர்களான யுவராஜ்சிங், ஆஷிஸ் நெக்ரா கலந்து கொள் கின்றனர். திருமணத்தையொட்டி ஹர்பஜன்சிங், பாஸ்ரா ஆகி யோருக்கு பிரத்யேகமாக ஆடைகள் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை பிரபல ஆடை வடிவமைப்பாளர் அர்ச்சனா கோச்சார் தயார் செய்துள்ளார்.
திருமணத்தை தொடர்ந்து நவம்பர் 1ம் தேதி டெல்லியில் உள்ள தாஜ் ஒட்டலில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் பிரதமர் நரேந்திர மோடி, பாலிவுட் நடிகர், நடிகைகள் மற்றும் சச்சின், இந்திய அணி வீரர்கள், தென் ஆப்ரிக்க வீரர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.