ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென் னிஸ் போட்டியில் செர்பியா வீரர் ஜோகோவிக் சாம்பியன் பட்டம் வென்றார். ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியின் இறுதி ஆட்டம் ஷாங்காய் நகரில் நேற்று நடந்தது. இப்போட்டியின் ஆரம்பம் முதலே ஜோகோவிக் ஆதிக்கம் செலுத்தினார்.
அவருக்கு ஈடு கொடுக்க முடியாமல் பிரான்ஸ் வீரர் சோங்கா திணறினார். 1 மணி 18 நிமிடங்கள் மட்டுமே நடந்த இப்போட்டியில் 6-2, 6-4 என்ற நேர் செட்களில் சோங்காவை வீழ்த்தி ஜோகோவிக் சாம்பியன் பட்டத்தை வென்றார்.