விளையாட்டு

மகளிர் கிரிக்கெட் டி20 உலகக்கோப்பை தொடர் ஒத்திவைப்பு: ஐசிசி அறிவிப்பு

செய்திப்பிரிவு

தென் ஆப்பிரிக்காவில் நடக்கவிருந்த மகளிர் கிரிக்கெட் டி20 உலகக்கோப்பை தொடர் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக ஐசிசி அறிவித்துள்ளது.

இதுகுறித்து ஐசிசி வெளியிட்ட அறிக்கையில், “2022 ஆம் ஆண்டின் இறுதியில் நடைபெற இருந்த மகளிர் டி20 கிரிக்கெட் போட்டிகள் 2023ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெறும். 2022ஆம் ஆண்டு காமன்வெல்த் போட்டிகள் உட்பட பல முக்கிய நிகழ்வுகள் நடைபெற உள்ளன. இதன் காரணமாகவே மகளிர் கிரிக்கெட் டி20 உலகக்கோப்பை தொடர் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

போட்டிகள் ஒத்தி வைக்கப்பட்டதன் மூலம் வீராங்கனைகளுக்கு ஓய்வு கிடைக்கும். இதன் காரணமாக போட்டியில் பங்கு கொள்வதற்கு போதிய நேரம் கிடைக்கும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரோனா பாதிப்பு காரணமாக உலகம் முழுவதும் நடைபெற இருந்த முக்கியப் போட்டிகள் ஒத்தி வைக்கப்பட்ட நிலையில், காமன்வெல்த் போட்டிகள் உள்ளிட்ட முக்கியப் போட்டிகளின் காரணமாக மகளிர் கிரிக்கெட் டி20 உலகக்கோப்பை தொடர் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT