விளையாட்டு

டெஸ்ட் போட்டிக்கான பயிற்சி பெறும் இந்திய கிரிக்கெட் அணி

பிடிஐ

விராட் கோலி தலைமையிலான இந்திய அணியினர், பிங்க் மற்றும் சிவப்பு நிறப் பந்துகளுடன் செயற்கையாக உருவாக்கப்பட்ட சூழலில் டெஸ்ட் போட்டிக்கான பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. இதில் முதலில் ஒருநாள் போட்டிகள் திட்டமிடப்பட்டிருந்தாலும், டெஸ்ட் போட்டி இரவு பகல் ஆட்டமாக நடக்கிறது. இந்தத் தொடருக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் அத்தனை வீரர்களும் டெஸ்ட் போட்டிக்கான பயிற்சியில் தற்போது ஈடுபட்டு வருகின்றனர்.

வீரர்கள் பயிற்சி மேற்கொள்ளும் காணொலியை கோலி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். முகமது ஷமி, சிராஜ் உள்ளிட்டோர் இந்தக் காணொலியில் இடம்பெற்றுள்ளனர்.

முன்னதாக ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்த ஐபிஎல் தொடரில் இந்திய வீரர்கள் பங்கெடுத்திருந்தனர். இதில் களம் மெதுவாக இருந்தது என்பதால், ஆஸ்திரேலியாவில் இருக்கும் களங்களுக்கு ஏற்பத் தயாராக டென்னிஸ் பந்துகளை வைத்து இந்திய வீரர்கள் பயிற்சி மேற்கொண்டனர். மேலும், இந்திய அணியினர் பிங்க் மற்றும் சிவப்பு நிறப் பந்துகளுடன் செயற்கையாக உருவாக்கப்பட்ட சூழலில் டெஸ்ட் போட்டிக்கான பயிற்சியிலும் ஈடுபட்டு வருகிறார்கள்.

டிசம்பர் 17ஆம் தேதி முதல் பகலிரவு டெஸ்ட் போட்டியில் ஆடிவிட்டு விராட் கோலி நாடு திரும்பவுள்ளார். கோலி- அனுஷ்கா தம்பதிக்குக் குழந்தை பிறக்கவிருப்பதால் இந்த முடிவை அவர் எடுத்துள்ளார்.

SCROLL FOR NEXT