பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் 3-வது நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து தனது முதல் இன்னிங்ஸில் 110 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 290 ரன்கள் குவித்துள்ளது.
அபுதாபியில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த பாகிஸ்தான் 151.1 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 523 ரன்கள் குவித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ஷோயிப் மாலிக் 245, ஆசாத் ஷபிக் 107 ரன்கள் சேர்த்தனர்.
பின்னர் பேட் செய்த இங்கிலாந்து அணி 2-வது நாள் ஆட்டநேர முடிவில் 21 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 56 ரன்கள் எடுத்திருந்தது. 3-வது நாளான நேற்று தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து அணியில் மொயீன் அலி 35, இயான் பெல் 63, மார்க் உட் 4 ரன்களில் ஆட்டமிழந்தபோதும், கேப்டன் அலாஸ்டர் குக் சதமடித்தார்.
ஆட்டநேர முடிவில் இங்கி லாந்து 110 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 290 ரன்கள் எடுத்துள் ளது. குக் 168, ஜோ ரூட் 3 ரன் களுடன் களத்தில் உள்ளனர்.