தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக மீதமுள்ள 2 ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய அணியும், முதல் 2 டெஸ்ட் போட்டிகளுக்குமான அணியும் அறிவிக்கப்பட்டுள்ளது.
டெஸ்ட் அணியில் ரவீந்திர ஜடேஜா மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளார். டெஸ்ட் அணியில் அஸ்வின் இடம்பெற்றுள்ளார். கடைசி 2 ஒருநாள் போட்டிகளுக்கான அணியில் அஸ்வின் காயம் காரணமாக இடம்பெறவில்லை.
ஒருநாள் போட்டி அணியில் உமேஷ் யாதவ் நீக்கப்பட்டு, அவருக்கு பதிலாக கர்நாடக அணியின் இடது கை வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீநாத் அரவிந்த் சேர்க்கப்பட்டுள்ளார்.
முதல் 2 டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய டெஸ்ட் அணி வருமாறு:
ஷிகர் தவன், முரளி விஜய், விராட் கோலி, ரஹானே, புஜாரா, ரோஹித் சர்மா, கே.எல்.ராகுல், விருத்திமான் சஹா, இசாந்த் சர்மா, வருண் ஆரோன், அஸ்வின், அமித் மிஸ்ரா, ஜடேஜா, ஸ்டூவர்ட் பின்னி, புவனேஷ் குமார், உமேஷ் யாதவ்.
இந்திய ஒருநாள் அணி
தோனி (கேப்டன்), ரோஹித் சர்மா, தவண், ரஹானே, விராட் கோலி, ரெய்னா, அக்சர் படேல், ஹர்பஜன் சிங், அமித் மிஸ்ரா, மோஹித் சர்மா, புவனேஷ் குமார், ஸ்ரீநாத் அரவிந்த், ஸ்டூவர்ட் பின்னி, அம்பாத்தி ராயுடு, குர்கீரத் சிங் மான்.
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக நடைபெறும் 2 நாள் பயிற்சி ஆட்டத்துக்கான வாரியத் தலைவர் அணி வருமாறு:
புஜாரா, கே.எல்.ராகுல், உன்முக்த் சந்த், கருண் நாயர், ஸ்ரேயஸ் ஐயர், நமன் ஓஜா, ஹர்திக் பாண்டியா, ஜயந்த் யாதவ், குல்தீப் யாதவ். ஷர்துல் தாக்கூர், நாது சிங், கரண் சர்மா, ஷெல்டன் ஜாக்சன்.
தென் ஆப்பிரிக்கா கடைசி 2 ஒருநாள் போட்டிகளை சென்னை மற்றும், மும்பையில் விளையாடுகிறது.
நவம்பர் 5-ம் தேதி டெஸ்ட் தொடர் தொடங்குகிறது. மொஹாலி, பெங்களூரு, நாக்பூர், டெல்லி ஆகிய நகரங்களில் 4 டெஸ்ட் போட்டிகள் நடைபெறுகிறது.