விளையாட்டு

அது என்னப்பா ‘சென்ட்- ஆஃப்’?-ஸ்டாய்னிஸ்;  ஒண்ணுமில்லையே - ரஷீத் பல்டி 

செய்திப்பிரிவு

அபுதாபியில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ஸ்டாய்னிஸ் 38 ரன்களையும் பிறகு 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றி டெல்லி வெற்றியில் ஆட்ட நாயகனாக பங்களிப்பு செய்தார்.

இதனையடுத்து டெல்லி அணி இறுதிப்போட்டியில் மும்பையை சந்திக்கிறது.

இதில் தொடக்கத்திலேயே ஸ்டாய்னிஸை இறக்கினார் அய்யர். அவரும் 27 பந்துகளில் 5 பவுண்டரி 1 சிக்சருடன் 38 ரன்கள் எடுத்தார். இவரும் தவணும் (78) இணைந்து 8.2 ஓவர்களில் 86 ரன்கள் விளாசினர்.

அப்போஹ்டு 38 ரன்களில் ஆப்கான் லெக் ஸ்பின்னர் ரஷீத் கான் வீசிய கச்சித லெக் பிரேக்கில் ஸ்டாய்னிஸ் பவுல்டு ஆனார். உடனே அவரை பெவிலியன் போ என்றவாறு ரஷீத் செய்கை செய்தார், ஸ்டான்னிஸ் அவரிடம் ஏதோ திரும்பவும் கேட்டார்.

இது தொடர்பாக ஆட்ட நாயகன் ஸ்டாய்னிஸ் போட்டி முடிந்த பிறகு கூறும்போது, “ஒன்றிரண்டு சீசன்களில் தொடக்கத்தில் இறங்கியிருக்கிறேன். எனவே தொடக்கத்தில் இறங்கி ஆட வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சி. முதலில் கொஞ்சம் ஸ்விங் இருந்த்து, அதானால் பார்த்து ஆட வேண்டியிருந்தது.

ரஷீத் என் விக்கெட்டை வீழ்த்தி விட்டு ‘செண்ட் ஆஃப்’ கொடுத்தார், நான், இதெல்லாம் என்னப்பா என்றேன், அவர் அதற்கு ‘நான் ஒன்றுமே சொல்லவில்லையே’ என்று கூறினார், எனவே அதோடு முடிந்தது.

இந்தத் தொடர் அனைவருக்கும் கடினமானது, குடும்பத்தினரைப் பிரிந்து, தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டியுள்ளது. இறுதிப் போட்டியில் தொடக்கத்தில் இறங்குவேனா என்பது தெரியாது.

ரிக்கி பாண்டிங்குடன் இது தொடர்பாகப் பேசி என்ன செய்யலாம் என்று முடிவெடுப்போம். மும்பை ஒரு பெரிய அணி. சிறந்த கிரிக்கெட்டை ஆடினால் கோப்பையை வெல்லலாம். எனவே எங்களின் சிறந்த ஆட்டத்தை மும்பைக்கு எதிராக ஆட வேண்டியது அவசியம்” என்றார்.

SCROLL FOR NEXT