விளையாட்டு

மும்பைன்னா ‘வித்தியாசம்’ - வெற்றிக்குப் பிறகு ரோஹித் சர்மா பெருமிதம்

செய்திப்பிரிவு

ரோஹித் சர்மா காய விவகாரம் குறித்த புதிர் இன்னமும் அவிழ்க்கப்படாத நிலையில் பலரும் விமர்சித்து வரும் வேளையில் பிளே ஆஃப் சுற்றில் வென்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது குறித்து மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோஹித் சர்மா பெருமிதம் ததும்பப் பேசினார்.

விஜய் நடித்த வேட்டைக்காரன் படத்தில் நடிகர் சலீம் கோஸ், ‘வேதநாயகம்னா பயம்’னு ஒரு டயலாக் சொல்வார், அதே போல் வெற்றிக்குப் பிறகு நேற்று ரோஹித் சர்மா ‘மும்பைன்னா வித்தியாசம்’ என்று கூறினார்

ரோஹித் சர்மா கூறியதாவது:

இதுதான் எங்கள் ஆட்டத்திலேயே சிறந்த ஆட்டம் என்று நினைக்கிறேன். அதாவது நாங்கள் இறங்கிய தீவிரத்தைக் குறிப்பிடுகிறேன். 2வது ஓவரில் நான் ஆட்டமிழந்த பிறகு டி காக், சூரியா பேட் செய்தவிதம்.

கடைசியில் பெரிய ஸ்கோரை எட்டியது, பவுலிங்கில் துல்லியத் தாக்குதல் நடத்தியது அனைத்தும் கச்சிதம். எங்களுக்கு இத்தனை ரன்கள் இலக்கு என்பதெல்லாம் கிடையாது ஏன்னா மும்பைன்னா வித்தியாசம். மும்பை டீம்னா வித்தியாசமா ஆடறது.

அதாவது எது வருதோ அதை ஆடுவது. டி20 கிரிக்கெட் என்பதே உத்வேகம்தான். எதிரணியிடம் உத்வேகம் ஏற்பட்டு விடக்கூடாது என்பதில் தெளிவாக இருந்தோம்.

இஷான் கிஷன்னா பாசிட்டிவ், அவரை அப்படியே ஆடச்சொன்னோம். டைம் அவுட்டில் அவருக்கு தெளிவான மெசேஜ் கொடுத்தோம். பயப்படாதே, உன் இயல்பான ஆட்டத்தை ஆடு. நெருக்கடியை அவர்கள் மீது திருப்பி விடு என்பதே அவருக்கான மெசேஜ்.

பலதிறம் வாய்ந்த பேட்டிங் திறமை இருப்பதால் டவுன் ஆர்டரில் ரொடேட் செய்ய முடிகிறது. பவுலிங்கையும் சுழற்சி முறையில் மாற்ற முடிகிறது.

ட்ரெண்ட் போல்ட் காயம் பெரிதாக இல்லை, அவர் ஓகேதான். பும்ரா போன்ற ஒரு பவுலர் இருந்தால் நம் வேலை குறைந்து விடும். பும்ரா போல்ட் இருவருமே வேறு நாட்டைச் சேர்ந்தவர்கள் ஆனால் இருவரும் சேர்ந்து புரிதலுடன் வீசி திட்டத்தைச் செயல்படுத்தியது அபாரம்.

இவ்வாறு கூறினார் ரோஹித் சர்மா.

SCROLL FOR NEXT