தோனி ஓய்வு அறிவித்த பிறகு முதன் முதலாக இந்திய அணி ஆஸ்திரேலியா தொடரில் பங்கேற்கவுள்ளது. தோனியின் இடத்தை நிரப்ப சஹா, ராகுல், ரிஷப் பந்த், சஞ்சு சாம்சன் என்று போட்டாப் போட்டி நிலவி வருகிறது.
இந்நிலையில் இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறியதாவது:
தோனியின் இடத்தை நிரப்புவது சுலபமல்ல, களத்தில் அவர் நிகழ்த்திய சாதனைகள் ஏராளம். இந்திய கிரிக்கெட் ஜாம்பவான்கள் பட்டியலில் தோனிக்கும் இடமுண்டு.
விக்கெட் கீப்பர் பேட்ஸ்மென் என சாதாரணமாக இவரது பணி முடிந்து விடவில்லை. கேப்டனாக எண்ணற்ற போட்டிகளில் சாதித்துள்ளார்.
கபில்தேவுக்குப் பிறகு எப்படி இன்னமும் மாற்று ஆல்ரவுண்டரைக் கண்டுப்பிடிக்க முடியவில்லையோ, தோனியும் அதே போல்தான், சச்சின் டெண்டுல்கருக்கு மாற்று வீரரைக் கண்டுப்பிடிக்க முடியவில்லையோ அப்படித்தான் தோனிக்கும் மாற்று கிடையாது.
ஆனால் இந்தியாவில் போதிய திறமைகள் உள்ளன. இளம் வீரர்கள் கிடைக்கும் வாய்ப்பை நன்றாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும், என்றார் ரவி சாஸ்திரி.