நாயகன் ருதுராஜ். 
விளையாட்டு

எந்த சூழ்நிலையையும் புன்னகையுடன் எதிர்கொள் என்பார் எங்கள் கேப்டன்: தோனி குறித்து ‘சிக்ஸ்பேக்’ ருதுராஜ் கெய்க்வாட் கருத்து

செய்திப்பிரிவு

துபாயில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் 2020-ன் 49-வது போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கடைசி பந்தில் பரபரப்பாக வென்றது.

இந்த வெற்றியில் 53 பந்துகளில் 73 ரன்கள் எடுத்த இளம் வீரர் ஆட்ட நாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.

ஆட்டம் முடிந்த பிறகு ஸ்டார் ஸ்போர்ட்ஸ் ஒளிபரப்பாளருக்கு அவர் கூறியதாவது:

நல்லபடியாக உணர்கிறேன். நம்பிக்கை பிறந்திருக்கிறது. இரண்டு நல்ல இன்னிங்ஸ்களிலும் அணி வெற்றியில் முடிந்தது சந்தோஷம்.

இரண்டு இன்னிங்ஸ்களிலும் சூழ்நிலை கடினமாக இருந்த போது ஆட்டமிழந்தேன். இனி இப்படி நடக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

எனக்கான கதவுகள் திறக்கும் போது நான் அதை நன்றாகப் பயன்படுத்தி ரன்கள் சேர்ப்பேன் என்ற நம்பிக்கை எப்போதும் இருந்தது. என்னை நம்பிக்கைக்குரியவனாக்கியது கரோனாதான்.

எந்த சூழ்நிலைமையாக இருந்தாலும் அதை புன்னகையுடன் எதிர்கொள்ள வேண்டும் என்று எங்கள் கேப்டன் தோனி கூறுவார். அது கடினமே, ஆனால் அவ்வண்ணமே செய்ய முயற்சித்தேன்.

அதுதான் என்னை அந்தத் தருணத்தில் தக்கவைக்கிறது. ஜிம்மில் கடின உடற்பயிற்சி மேற்கொள்கிறேன், சிக்ஸ்பேக் ஆப்ஸ் வைத்துள்ளேன், என்றார் புன்னகையுடன்.

SCROLL FOR NEXT