விளையாட்டு

இந்தியா-ஆஸ்திரேலியா தொடர் அட்டவணையை உறுதி செய்த ஆஸி. :  நவ.27-ல் முதல் ஒருநாள் போட்டி 

செய்திப்பிரிவு

ஆஸ்திரேலியா சென்று இந்திய அணி 3 ஒருநாள், 3 டி20, 4 டெஸ்ட்கள் கொண்ட தொடரை ஆடுகிறது, இதற்கான போட்டி அட்டவணையை கிரிக்கெட் ஆஸ்திரேலியா ஒருவழியாக உறுதி செய்தது.

அதன் படி முதல் ஒருநாள் போட்டி நவ.27ம் தேதி சிட்னியில் பகலிரவு போட்டியாகத் தொடங்குகிறது. 29ம் தேதி அடுத்த ஒருநாள் போட்டியும் சிட்னியில்தான் நடக்கிறது. 3வது ஒருநாள் தலைநகர் கான்பெராவில் டிசம்ப்ர் 2ம் தேதி நடைபெறுகிறது.

முதல் டி20 போட்டி டிசம்பர் 4ம் தேதி கான்பராவில் நடக்க, 6ம் தேதி, 8ம் தேதி சிட்னியில் 2வது, 3வது டி20 போட்டிகள் நடைபெறுகின்றன.

டெஸ்ட் போட்டிகள் டிசம்பர் 17 முதல் 21 வரை அடிலெய்டில் பகலிரவு பிங்க் பந்து டெஸ்ட் போட்டியாகவும், பாக்சிங் டே டெஸ்ட் டிசம்பர் 26ம் தேதியும் சிட்னியில் ஜனவரி 7-11 மூன்றாவது டெஸ்ட்டும் ஜனவரி 15-19 பிரிஸ்பனில் 4வது டெஸ்ட் போட்டியும் நடைபெறுகிறது.

SCROLL FOR NEXT